< Back
கால்பந்து
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு
கால்பந்து

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Aug 2023 8:28 PM IST

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 22 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சு நகரில் வரும் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 22 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குர்ப்ரீத் சிங் சந்து, குர்மீத் சிங், தீரஜ் சிங், சந்தேஷ் ஜிங்கன், அன்வர் அலி, நரேந்திர கெலாட், லால்சுங்னுங்கா, ஆகாஷ் மிஸ்ரா, ரோஷன் சிங், ஆஷிஷ் ராய், ஜாக்சன் சிங், சுரேஷ் சிங், அபுயா ரால்டே, அமர்ஜித் சிங், ராகுல் கே.பி., மகேஷ் சிங், சிவசக்தி நாராயண், ரஹீம் அலி, அனிகேத் ஜாதவ், விக்ரம் பிரதாப் சிங், ரோஹித் தானு, சுனில் சேத்ரி ஆகிய 22 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர். அணியின் தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் செயல்பட உள்ளார்.


# '

More details https://t.co/VzlDYo5P6S#IndianFootball ⚽️ pic.twitter.com/ip9Ylh0QKS

— Indian Football Team (@IndianFootball) August 1, 2023 ">Also Read:


மேலும் செய்திகள்