ஐ.எஸ்.எல் கால்பந்து : போர்ஜா ஹெர்ரேரா-வை ஒப்பந்தம் செய்தது நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணி
|29 வயதான போர்ஜா ஹெர்ரேரா ஒரு வருட ஒப்பந்தத்தில் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார்.
கோவா,
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத் எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் அந்த அணி கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய வீரர் டிபென்டர் மனோஜ் முகமதுவை ஒப்பந்தம் செய்தது. 23 வயதாகும் இவர் 2024-2025 சீசன் வரை ஐதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நடப்பு சாம்பியனான ஐதராபாத் எப்சி அணி ஸ்பெயின் மிட்பீல்டர் போர்ஜா ஹெர்ரேராவை ஒப்பந்தம் செய்துள்ளது. 29 வயதான அவர் ஒரு வருட ஒப்பந்தத்தில் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார்.
ஐதராபாத் எப்.சி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து போர்ஜா ஹெர்ரேரா கூறுகையில், "இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஐதராபாத் எப்சி சிறந்த ரசிகர்களைக் அணியாகும் மற்றும் நடப்பு சாம்பியனாக உள்ளது. இந்த புதிய சவாலை ஆர்வமாக உள்ளேன்" என தெரிவித்தார்.