< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல் கால்பந்து : இந்திய வீரர் மனோஜ் முகமது-வை ஒப்பந்தம் செய்தது ஐதராபாத் எப்.சி அணி
|21 July 2022 9:38 PM IST
23 வயதாகும் இவர் 2024-2025 சீசன் வரை ஐதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கோவா,
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத் எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் அந்த அணி இந்திய வீரர் டிபென்டர் மனோஜ் முகமதுவை ஒப்பந்தம் செய்துள்ளது. 23 வயதாகும் இவர் 2024-2025 சீசன் வரை ஐதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் அணிக்கு தேர்வாகியது குறித்து அவர் கூறுகையில், "எனது கால்பந்து வாழ்க்கையின் இந்த கட்டத்தில் ஐதராபாத் அணிக்காக விளையாட இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு பயிற்சியிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது சிறந்த ஆட்டத்தை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்," என அவர் தெரிவித்தார்.