< Back
கால்பந்து
கால்பந்து
உலக கோப்பை கால்பந்து: கோப்பையை வென்றால் ஜெர்மனி வீரர்களுக்கு தலா ரூ.3 கோடி போனஸ்
|27 Sept 2022 2:44 AM IST
உலக கோப்பையை ஜெர்மனி வீரர்கள் வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.3 கோடியே 15 லட்சம் போனசாக வழங்கப்படும் என்று ஜெர்மனி கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
பெர்லின்,
32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை கத்தாரில் நடக்கிறது. 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஜெர்மனி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உலக கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.3 கோடியே 15 லட்சம் போனசாக வழங்கப்படும் என்று அந்த நாட்டு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இறுதி ஆட்டத்தில் தோற்று 2-வது இடத்தை பிடித்தால் சுமார் ரூ.2 கோடி கிடைக்கும். ஜெர்மனி கால்பந்து சங்கம், அணி வீரர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் போனஸ் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.