< Back
கால்பந்து
வேல்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் காரெத் பாலே ஓய்வு
கால்பந்து

வேல்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் காரெத் பாலே ஓய்வு

தினத்தந்தி
|
10 Jan 2023 1:42 AM IST

வேல்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் காரெத் பாலே ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

வேல்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் காரெத் பாலே சர்வதேச மற்றும் கிளப் கால்பந்து போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 33 வயதான காரெத் பாலே வேல்ஸ் அணிக்காக 111 ஆட்டங்களில் விளையாடி 41 கோல்கள் அடித்துள்ளார். 64 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வேல்ஸ் தகுதி பெற்றதிலும், 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் அரைஇறுதி வரை முன்னேறியதிலும் அவரது பங்களிப்பு மகத்தானது. ஆனால் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆடிய அவரது தலைமையிலான வேல்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுடன் நடையை கட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்