< Back
கால்பந்து
பள்ளி அணிகளுக்கான கால்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பார்ட்டன்ஸ் அணி

கோப்புப்படம்

கால்பந்து

பள்ளி அணிகளுக்கான கால்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பார்ட்டன்ஸ் அணி

தினத்தந்தி
|
16 Oct 2022 12:52 AM IST

பள்ளி அணிகளுக்கான கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பார்ட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான கால்பந்து போட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் சிறுவர்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒயிட் ஸ்பார்ட்டன்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கிட்ஸ் எப்.சி.யை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் மஞ்சள் டைகர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் கிட்ஸ் எப்.சி.யை வீழ்த்தியது. லீக் முடிவில் ஒயிட் ஸ்பார்ட்டன்ஸ், ரெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சிறுமிகள் பிரிவில் லீக் சுற்று முடிவில் பிட் கிட்ஸ், எவர் கிரீன் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

மேலும் செய்திகள்