ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: சுவிட்சர்லாந்து - ஜெர்மனி ஆட்டம் டிரா
|24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
ஹெஸ்ஸே,
24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஹெஸ்ஸேவில் இன்று நடைபெற்ற குரூப் - ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுவிட்சர்லாந்து அணி ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோல் திருப்ப ஜெர்மனி அணி கடுமையாக போராடியது. அந்த அணி வழக்கமான நேரத்தில் (90 நிமிடம் வரை) ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஜெர்மனி அணி பதில் கோல் திருப்பியது. ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் ஜெர்மனி அணி பதில் கோல் திருப்பி ஆட்டத்தை 1-1 என சமனுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.