< Back
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் இன்று மோதல்
கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
5 July 2024 10:17 AM IST

இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- ஜெர்மனி அணிகள் மோத உள்ளன

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) முடிவில் பிரான்ஸ் , போர்ச்சுகல் , நெதர்லாந்து, ஸ்பெயின் , ஜெர்மனி , இங்கிலாந்து , சுவிட்சர்லாந்து , துருக்கி ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்- பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.

மேலும் செய்திகள்