< Back
கால்பந்து
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா..?
|14 Jun 2024 2:35 PM IST
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது.
முனிச்,
சர்வதேச கால்பந்தில் உலகக் கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டியான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது. 24 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் அடுத்த மாதம் 14-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஜெர்மனி - ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
பரிசுத்தொகை விவரம்:-
இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் கோடியாகும். பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் போட்டி கட்டணமாக தலா ரூ.83 கோடி வழங்கப்படும். லீக்கில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.9 கோடி கிடைக்கும்.கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை ரூ.72 கோடியாகும். போட்டி கட்டணம், ஒவ்வொரு சுற்று வெற்றிக்குரிய தொகை எல்லாவற்றையும் சேர்த்தால் ஒட்டுமொத்தத்தில் மகுடம் சூடும் அணி அதிகபட்சமாக ரூ.255 கோடி வரை பரிசுத்தொகையாக பெற முடியும்.