< Back
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் ரொனால்டோ - எம்பாப்பே
கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் ரொனால்டோ - எம்பாப்பே

தினத்தந்தி
|
2 July 2024 9:40 AM IST

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.

கெலோன்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி, ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் கிலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதனையடுத்து வரும் சனிக்கிழமை (6-ம் தேதி) நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் இவை இரண்டும் நேருக்கு நேர் மோத உள்ளன. கால்பந்து உலகின் இருபெரும் நட்சத்திரங்களான ரொனால்டோ மற்றும் கிலியன் எம்பாப்பே நேருக்கு நேர் மோத உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் செய்திகள்