< Back
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலி - குரோஷியா ஆட்டம் டிரா

Image : @UEFA

கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலி - குரோஷியா ஆட்டம் டிரா

தினத்தந்தி
|
25 Jun 2024 2:33 PM IST

24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

சாக்சனி,

24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சாக்சனியில் உள்ள லீப்ஜிக்கில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இத்தாலி - குரோஷியா அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குரோஷியா அணி கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து இத்தாலி அணி பதில் கோல் திருப்ப கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் வழக்கமான நேரத்தில் (90வது நிமிடம் வரை) அந்த அணி கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக குரோஷியா அணி இந்த ஆட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் முடியும் தருவாயில் இத்தாலி அணி கோல் அடித்து (90+8 வது நிமிடம்) அசத்தியது. இதன் காரணமாக இந்த ஆட்டம் 1-1 என டிரா ஆனது.

மேலும் செய்திகள்