< Back
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜார்ஜியா - செக் குடியரசு ஆட்டம் டிரா

Image Courtesy: AFP

கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜார்ஜியா - செக் குடியரசு ஆட்டம் டிரா

தினத்தந்தி
|
22 Jun 2024 3:28 PM GMT

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஹாம்பர்க்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜார்ஜியா - செக் குடியரசு அணிகள் மோதின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜார்ஜியா அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

மேலும் செய்திகள்