< Back
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

Image : @UEFA

கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
20 Jun 2024 11:15 AM GMT

இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டென்மார்க்- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில்,இந்த தொடரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுலோவேனியா- செர்பியா அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க்- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

நள்ளிரவு 12.30 மணிக்கு கொலோனில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின்- இத்தாலிஅணிகள் மோத உள்ளன.

மேலும் செய்திகள்