< Back
கால்பந்து
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ருமேனியாவை வீழ்த்தி பெல்ஜியம் முதலாவது வெற்றி
|24 Jun 2024 1:48 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ருமேனியாவை வீழ்த்தி பெல்ஜியம் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
கெலோன்,
24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் கெலோனில் நடைபெற்ற 'இ' பிரிவு லீக்கில் பெல்ஜியம் - ருமேனியா அணிகள் மோதின.
இதில் முதல் பாதி ஆட்ட நேரத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்ற பெல்ஜியம், 2-வது பாதியிலும் கோல் அடித்து அசத்தியது. ஆனால் ருமேனியாவால் பதில் கோல் திருப்ப முடியவில்லை.
முழுநேர ஆட்ட முடிவில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி இந்த தொடரில் முதலாவது வெற்றியை பெற்றது.
பெல்ஜியம் தரப்பில் யுரி டைல்மன்ஸ் மற்றும் கெவின் டி புருனே ஆகியோர் கோல் அடித்தனர். இதனையடுத்து பெல்ஜியம் தனது கடைசி லீக்கில் உக்ரைனை சந்திக்கிறது.