ஐரோப்பிய கோப்பை கால்பந்து: முதல் அணியாக வெளியேறியது போலந்து
|குரூப் டி பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் நேற்று மோதின.
முனிச்,
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் குரூப் டி பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில், 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து பரிதாபமாக வெளியேறியது.முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்திடம் போலந்து தோல்வியடைந்தது. மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் போலந்து வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.