< Back
கால்பந்து
ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி

Image Courtesy : @EURO2024 twitter

கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி

தினத்தந்தி
|
26 March 2023 4:11 AM IST

கேப்டன் பொறுப்பை கிலியன் எம்பாப்பே ஏற்ற முதல் ஆட்டத்திலேயே பிரான்ஸ் அணி வெற்றியை ருசித்துள்ளது.

பாரீஸ்,

17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ சாம்பியன்ஷிப்) ஜெர்மனியில் அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடக்கிறது. போட்டியை நடத்தும் ஜெர்மனி தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதி சுற்று மூலம் இந்த போட்டிக்கு தகுதி பெறும். தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 53 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதி காணும்.

இதில் பாரீஸ்சில் நேற்று முன்தினம் நடந்த 'பி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்-நெதர்லாந்து அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. பந்து அதிக நேரம் (55 சதவீதம்) நெதர்லாந்து அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்த அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை.

பிரான்ஸ் அணி தரப்பில் கிரிஸ்மான் 2-வது நிமிடத்திலும், உபாமிசனோ 8-வது நிமிடத்திலும், கேப்டன் கிலியன் எம்பாப்பே 21-வது மற்றும் 88-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர். கேப்டன் பொறுப்பை கிலியன் எம்பாப்பே ஏற்ற முதல் ஆட்டத்திலேயே பிரான்ஸ் அணி வெற்றியை ருசித்துள்ளது.

மேலும் செய்திகள்