< Back
கால்பந்து
யூரோ கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; குரோஷியாவை வீழ்த்தி வேல்ஸ் வெற்றி..!

image courtesy; PTI

கால்பந்து

யூரோ கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; குரோஷியாவை வீழ்த்தி வேல்ஸ் வெற்றி..!

தினத்தந்தி
|
16 Oct 2023 12:19 PM IST

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் குரோஷியாவை வீழ்த்தி வேல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

கார்டிப்,

17-வது ஐரோப்பிய கால்பந்து தொடர் (யூரோ சாம்பியன்ஷிப்) ஜெர்மனியில் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்க உள்ளது. தொடரை நடத்தும் நாடான ஜெர்மனி தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதிச்சுற்று மூலம் இந்த தொடருக்கு தகுதி பெற உள்ளன.

தகுதிச்சுற்றில் பங்கேற்றுள்ள 23 அணிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

அதன்படி 'டி' பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வேல்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வேல்ஸ் அணி தரப்பில் ஹாரி வில்சன் வெற்றிக்கான 2 கோல்களையும் அடித்தார். குரோஷியா அணி தரப்பில் மரியோ பாசிலாக் கோல் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் வேல்ஸ் 'டி' பிரிவின் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குரோஷியா 3-வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்