< Back
கால்பந்து
கால்பந்து
துரந்த் கோப்பை கால்பந்து: மோகன் பகானை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் சாம்பியன்
|1 Sept 2024 9:58 AM IST
துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் மோகன் பகான் அணியை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் சாம்பியன் பட்டம் வென்றது.
கொல்கத்தா,
துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 133வது தொடர் ஜூலை 27ம் தேதி தொடங்கியது. போட்டிகள் கொல்கத்தா, கோக்ராஜ்ஹர், ஷில்லாங், ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களில் நடந்தன.
மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் மோகன் பகான் – நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என டிராவில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கபட்டது. அதில் நார்த்ஈஸ்ட் 4-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.