< Back
கால்பந்து
850 கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை...!!

image courtesy;AFP

கால்பந்து

850 கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை...!!

தினத்தந்தி
|
3 Sept 2023 10:42 AM IST

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக்கில் அல்-ஹஸ்முக்கு எதிராக தனது 850-வது கோலை அடித்து வரலாறு படைத்துள்ளார்.

ரியாத்,

சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அல்-நாசர் அணிக்காக போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.

இதில் நடந்த ஆட்டம் ஒன்றில் அல்-நாசர் மற்றும் அல்-ஹஸ்ம் அணிகள் மோதின. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். மேலும் ஆட்டத்தின் போது 2 சக வீரர்கள் கோல் அடிக்க உதவினார். இதன் மூலம் அல்-நாசர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அல் ஹஸ்ம் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அல்-நாசர் அணி புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது ரொனால்டோவின் 850-வது கோலாக பதிவாகியுள்ளது. அவரது வெற்றிகரமான கால்பந்து வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இது அமைந்துள்ளது. மேலும் கால்பந்து வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ரொனால்டோ தான்.

மேலும் செய்திகள்