கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி
|கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
சாண்டா கிளாரா,
உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் சாண்டா கிளாராவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெனிசுலா - ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஈகுவடார் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தி அபாரமாக செயல்பட்ட வெனிசுலா அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது.
இறுதியில் ஆட்டநேர முடிவில் வெனிசுலா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து டெக்சாசில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ - ஜமைக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது.