< Back
கால்பந்து
கால்பந்து
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அமெரிக்கா அணியை வீழ்த்தி உருகுவே வெற்றி
|2 July 2024 2:35 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
புளோரிடா,
உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அமெரிக்கா - உருகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் உருகுவே அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் மதியாஸ் ஆட்டத்தின் 2வது பாதியில் 66வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் உருகுவே அணி 1-0 என வெற்றி பெற்றது.