சாம்பியன்ஸ் லீக்: பெனால்டி சூட் அவுட்டில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு முன்னேற்றம்
|ரியல் மாட்ரிட் அரையிறுதியில் பேயர்ன் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
மான்செஸ்டர்,
யூ.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைந்தன. இதில் இன்று நடைபெற்ற கடைசி காலிறுதி லெக் 2 ஆட்டத்தில் பலம் வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியதால் இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் சரி சமமாக மோதின. இதனால் இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய காலிறுதி லெக் 1 ஆட்டமும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இதனால் அரையிறுதிக்கு முன்னேற போகும் அணி எது? என்பதை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சூட் அவுட்டில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதி ஆட்டங்களில் முறையே பி.எஸ்.ஜி - டார்ட்மண்ட் அணிகளும், ரியல் மாட்ரிட் - பேயர்ன் அணிகளும் மோத உள்ளன.