< Back
கால்பந்து
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 15வது முறையாக கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட்

Image : UEFA Champions League

கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 15வது முறையாக கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட்

தினத்தந்தி
|
2 Jun 2024 8:45 AM IST

இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் டார்ட்மண்ட் அணியும் ,ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.

லண்டன்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சாம்பியன் லீக் பட்டத்தை வெல்வதற்காக இறுதிப்போட்டியானது நேற்று (ஜூன் 1) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைத்தனத்தில் வைத்து நடைபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்ட்மண்ட் அணியும், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இதனால் முதல் பாதி 0-0 என முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ரியல் மாட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது . ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் டானி கார்வஜல் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணியின் வினீசியஸ் ஜூனியர் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் டார்முண்ட் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வெல்வது இது 15 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்