சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பாரீஸ்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடந்த அரையிறுதியின் 2-வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் தரப்பில் ஜோசலு வெற்றிக்குரிய 2 கோல்களையும் அடித்தார். பேயர்ட் முனிச் தரப்பில் அல்போன்சோ டேவிஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரியல் மாட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.