சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: எம்பாப்பேயின் பி.எஸ்.ஜி. அணி அரையிறுதிக்கு தகுதி
|பி.எஸ்.ஜி. அணி சார்பில் கிலியன் எம்பாப்பே 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
பார்சிலோனா,
யூ.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி லெக் 2 ஆட்டத்தில் எம்பாப்பேயின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணியும், பார்சிலோனா அணியும் மோதின.
இதில் முதல் கோலை பார்சிலோனா அடித்து முன்னிலை பெற்றாலும், அந்த அணியால் மேற்கொண்டு கோல்கள் அடிக்க முடியவில்லை. ஆனால் பி.எஸ்.ஜி. அணி 4 கோல்கள் அடித்து அசத்தியது. முழு நேர ஆட்ட முடிவில் பி.எஸ்.ஜி. 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கிலியன் எம்பாப்பே 2 கோல்களும், விதின்ஹா மற்றும் டெம்பலே தலா ஒரு கோலும் அடித்தனர். பார்சிலோனா அணி தரப்பில் ரபின்ஹா மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய காலிறுதி லெக் 1 ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இருப்பினும் 2 போட்டிகளிலும் சேர்த்து பி.எஸ்.ஜி. 6 கோல்களும், பார்சிலோனா 4 கோல்களும் அடித்துள்ளன. இதனால் கோல் கணக்கின் அடிப்படையில் பி.எஸ்.ஜி. அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.