< Back
கால்பந்து
கால்பந்து
சென்னையின் எப்.சி. அணியில் பிரேசில் வீரர் ஒப்பந்தம்
|6 Jun 2024 12:46 AM IST
சென்னையின் எப்.சி. அணியில், பிரேசிலை சேர்ந்த எல்சின்ஹோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் விளையாடி வரும் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணிக்கு, பிரேசிலை சேர்ந்த எல்சின்ஹோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பின்களம் மற்றும் நடுகள வீரரான 33 வயது எல்சின்ஹோ 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். எல்சின்ஹோ கடந்த சீசனில் ஜாம்ஷெட்பூர் அணிக்காக விளையாடினார்.