< Back
கால்பந்து
உலகக் கோப்பை கால்பந்து: கடைசி அணியாக கத்தார் சென்றடைந்தது பிரேசில்
கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: கடைசி அணியாக கத்தார் சென்றடைந்தது பிரேசில்

தினத்தந்தி
|
20 Nov 2022 10:48 AM IST

6-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ள பிரேசில் கடைசி அணியாக கத்தார் சென்றடைந்துள்ளது.

தோகா,

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 மைதானங்களில் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் கடந்த ஒரு வாரமாக ஒன்றன் பின் ஒன்றாக கத்தார் சென்றடைந்தன. இந்த நிலையில் 6-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ள பிரேசில் கடைசி அணியாக நேற்று நள்ளிரவு கத்தார் சென்றடைந்துள்ளது.

தியாகோ சில்வா தலைமையிலான பிரேசில் அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக விளங்குகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரேசில் அணி தனது முதல் போட்டியில் செர்பியா அணியை வரும் 25-ஆம் தேதி எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்