< Back
கால்பந்து
தூரந்த் கோப்பை கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி

Image Tweeted By @bengalurufc

கால்பந்து

தூரந்த் கோப்பை கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி

தினத்தந்தி
|
18 Sept 2022 11:17 PM IST

பெங்களூரு அணி முதல் முறையாக தூரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது.

கொல்கத்தா,

20 அணிகள் இடையிலான 131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக தூரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது. பெங்களூரு அணி சார்பாக சிவசக்தி (10வது நிமிடம்), பிரேசில் வீரர் ஆலன் கோஸ்டா (61வது) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மும்பை அணிக்காக அபுயா (30-வது நிமிடம்) மட்டுமே ஒரு கோல் அடிக்க சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி தூரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்