< Back
கால்பந்து
கால்பந்து
லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி 'சாம்பியன்'
|16 May 2023 4:43 AM IST
முன்னணி கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
முன்னணி கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் எஸ்பான்யோல் கிளப்பை தோற்கடித்தது.
இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. அந்த அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்குவது இது 27-வது முறையாகும். பார்சிலோனா அணி இதுவரை 34 ஆட்டங்களில் ஆடி 27 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி என மொத்தம் 85 புள்ளிகள் குவித்து முதலிடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட் 71 புள்ளிகள் தான் எடுத்து இருக்கிறது.