< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
|20 Jun 2024 10:32 AM IST
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹராரே,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்றில் உகாண்டா மற்றும் நமீபியாவிடம் தோல்வியடைந்த ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
உலகப்போட்டிக்குத் தகுதி பெற முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பது அவசியம். எனவே மூன்றாம் இடம் பிடித்த ஜிம்பாப்வே அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை.
அதற்கு பொறுப்பேற்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டேவ் ஹூட்டன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இடைக்கால தலைமை பயிற்சியாளராக வால்டர் சாவகுடா கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவாவை சேர்ந்த ஜஸ்டின் சம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.