< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் ஓய்வு
|13 May 2024 3:00 AM IST
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஜிம்பாப்வே அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான சீன் வில்லியம்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார்.
ஹராரே,
வங்காளதேசம் - ஜிம்பாப்வே இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முடிவடைந்தது. அதில் ஜிம்பாப்வே 1-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான சீன் வில்லியம்ஸ் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இவர் இதுவரை ஜிம்பாப்வே அணிக்காக 81 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1691 ரன்களும், 48 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இவர் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.