< Back
கிரிக்கெட்
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இன்று மோதல்...!

Image Courtesy: @BCCI

கிரிக்கெட்

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இன்று மோதல்...!

தினத்தந்தி
|
14 July 2023 8:49 AM IST

இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று தொடங்கியது.

கொழும்பு,

இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம்-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்