< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்....!!
|21 July 2023 10:19 AM IST
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன.
கொழும்பு,
8 அணிகள் இடையிலான இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. அதில் வெற்றி பெற்ற இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. முதலில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
முதலில் நடைபெறும் இலங்கை - பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.