இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
|இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
கொழும்பு,
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பாகிஸ்தானையும், அரையிறுதியில் வங்காளதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முகமது ஹாரிஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றது. இந்தியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. அரையிறுதியில் இலங்கையை பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரு அணிகளுக்கான வீரர்கள் விவரம்;
இந்தியா: சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா, நிகின் ஜோஸ், யாஷ் துல்(சி), ரியான் பராக், நிஷாந்த் சிந்து, துருவ் ஜூரல், மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, ஆர்எஸ் ஹேங்கர்கேர்,யுவராஜ்சிங் தோடியா.
பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான், உமைர் யூசுப், தயாப் தாஹிர், காசிம் அக்ரம், முகமது ஹாரிஸ்(சி), முபாசிர் கான், மெஹ்ரான் மும்தாஜ், முகமது வாசிம் ஜூனியர், அர்ஷத் இக்பால், சுபியான் முகீம்