< Back
கிரிக்கெட்
இந்தியா ஏ அணியில் இளம் நட்சத்திர வீரர் சேர்ப்பு

image courtesy; PTI

கிரிக்கெட்

இந்தியா 'ஏ' அணியில் இளம் நட்சத்திர வீரர் சேர்ப்பு

தினத்தந்தி
|
23 Jan 2024 12:37 PM IST

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் 4 நாட்கள் கொண்ட 4 பயிற்சி போட்டிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்திய மண்ணில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை எடுக்கும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில் சில முக்கிய இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகின்றனர்.

இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய ஏ அணியில் இளம் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்