< Back
கிரிக்கெட்
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆடுவது குறித்து விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும் - ரோகித் சர்மா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆடுவது குறித்து விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும் - ரோகித் சர்மா

தினத்தந்தி
|
25 Dec 2023 8:47 PM IST

உலகக் கோப்பை இறுதிபோட்டி தோல்வி என்னையும் சக வீரர்களையும் காயப்படுத்தியது உண்மைதான்.

செஞ்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார் . அப்போது அவர் கூறியதாவது,

உலகக் கோப்பை இறுதிபோட்டி தோல்வி என்னையும் சக வீரர்களையும் காயப்படுத்தியது உண்மைதான். ஆனால் அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ரோகித் சர்மாவிடம் 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் கூறியதாவது,

நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் இருக்கிறது. அனைவரும் சிறப்பாக விளையாட விரும்புகின்றனர். எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்