< Back
கிரிக்கெட்
உள்ளூர் பயிற்சியாளரை மதிக்காத வீரர்கள்- பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் வருத்தம்
கிரிக்கெட்

உள்ளூர் பயிற்சியாளரை மதிக்காத வீரர்கள்- பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் வருத்தம்

தினத்தந்தி
|
7 Feb 2023 3:19 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் பயிற்சியாளரை மதிப்பது இல்லை ; வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் நன்றாக நடந்து கொள்கிறார்கள் என முன்னாள் பயிற்சியாளர் வருத்தம் தெரிவித்தார்

இஸ்லாமாபாத்

மிக்கி ஆர்தர் பாகிஸ்தானில் அணியின் 'ஆன்லைன் பயிற்சியாளராக' சேர உள்ளார் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துணை ஊழியராக பணியாற்றிய முன்னாள் தேசிய தேர்வாளரான சிக்கந்தர் பக்த், வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்களுடன் ஒப்பிடும்போது வீரர்கள் தங்கள் சொந்த பயிற்சியாளர்களை நியாயமற்ற முறையில் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் எப்பொழுதும் அழுத்தத்தில் இருப்பதற்கான காரணத்தை விளக்கிய பக்த், கிரிக்கெட் வீரர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

"நான் பாகிஸ்தான் அணியுடன் விளையாடியபோது பாகிஸ்தான் பயிற்சியாளரிடன் ஒரு வீரர் 'நீங்கள் பாகிஸ்தானுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள். நான் 40 போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள். நீங்கள் எனக்கு பாடம் எடுக்க முயற்சிக்கிறீர்களா?

நான் சத்தியமாக இதைச் சொல்கிறேன். இது தான் பாகிஸ்தான் வீரர்களின் அணுகுமுறை. ஒரு கிரிக்கெட் வீரர் சென்று பாபர் ஆசம், ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான் ஆகியோரிடம் ஏதாவது சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?

பாகிஸ்தான் வீரர்கள் வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் நன்றாக நடந்து கொள்கிறார்கள். மிக்கி ஆர்தரை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் ஒரு சர்வதேச ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. அவர் மனிதர்களூடன் பழகுவதில் நல்லவர். அவர் ஒரு வெளிநாட்டவர் என்பதால், அவர்கள் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள்" என்று பக்த் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது பிரபல வீரர் வாசிம் அக்ரம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார், இது அதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக அக்ரம் முன்னேறுவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, முன்னாள் கேப்டன் 'இல்லை' என்று பதிலளித்தார்.

ரவி சாஸ்திரி அல்லது ஜஸ்டின் லாங்கர் அல்லது ஒரு ராகுல் டிராவிட் சொல்லுவது போல் எந்த பாகிஸ்தான் பயிற்சியாளரும் பதவியில் நீடித்ததில்லை என்பது வரலாறு

பாகிஸ்தானில் நிறைய பயிற்சியாளர்கள் உள்ளனர். ஜாவித் மியான்டத், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக், முகமது யூசுப் - ஆனால் அவர்களால் வீரர்களை சமாளிக்க முடியவில்லை.

என்னுடன் பணிபுரியும் ஒரு வீரரின் பெயரை குறிப்பிடாமல் ஒரு உதாரணம் கூறுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தனக்கு எந்தப் பயிற்சியாளர் பொறுப்பும் வழங்கப்ப கூடாது என்று தினமும் பிரார்த்தனை செய்வதாக ஒருவர் என்னிடம் கூறினார். அங்கு பல சிரமங்களும் அழுத்தங்களும் உள்ளன, ஒவ்வொரு தொழுகையின் போது எனக்கு பிசிபியில் வேலை வழங்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன், "என்று அவர் கூறியதாக பகத் கூறினார்.

மேலும் செய்திகள்