< Back
கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

image courtesy: BCCI twitter

கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
24 Jun 2024 7:44 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரில் செயின்ட் லூசியாவில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

செயின்ட் லூசியா,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்8 சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. குரூப்1ல் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களது கடைசி லீக்கில் மோதுகின்றன.

செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போட்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.

மேலும் செய்திகள்