< Back
கிரிக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: வர்ணனையாளர்கள் பட்டியலில் கங்குலி, கவாஸ்கர்...!
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: வர்ணனையாளர்கள் பட்டியலில் கங்குலி, கவாஸ்கர்...!

தினத்தந்தி
|
2 Jun 2023 4:52 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது.பந்து வீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோரும், ஹிந்தி வர்ணனைக்கு ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, தீப் தாஸ்குப்தா மற்றும் எஸ். ஸ்ரீசாந்த் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ் மொழி வர்ணனைக்கு யோ மகேஷ், எஸ்.ரமேஷ், எல்.பாலாஜி மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்