< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை; கனவு அணியில் நான் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தான் - ஷிகர் தவான்

image courtesy; AFP

கிரிக்கெட்

உலகக்கோப்பை; கனவு அணியில் நான் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தான் - ஷிகர் தவான்

தினத்தந்தி
|
21 Aug 2023 11:24 AM IST

உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு 11 அணியில் இடம்பிடித்த முதல் 5 வீரர்களை ஷிகர் தவான் வெளிப்படுத்தியுள்ளார்.

புது டெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறுகிறது. அக்.5-ந்தேதி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான கனவு 11 அணியில் தான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வெளிப்படுத்தி உள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் , ஒரு தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தவான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களின் விவரம்;-

முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் கூறியுள்ளார்.

2-வது வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார்.

3-வது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார்.

4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை தேர்வு செய்துள்ளார்.

5-வது வீரராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவை தேர்வு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்