உலகக்கோப்பை; ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீர்ர் - ராகுலுக்கு இடமில்லை...!
|இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் சந்திக்க உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்க உள்ளது.
இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகி உள்ளனர்.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாத காலமே உள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் தாங்கள் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை அறிவித்து வருகின்றனர்.
இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் ஆட்டமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அதில் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலுக்கு இடம் அளிக்கவில்லை.
சஞ்சய் பாங்கர் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் லெவன்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.