உலகக்கோப்பை; இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு...காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் முன்னணி வீரர்...?
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 229 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைப்பெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 229 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி, வேன் டர் டுசென் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது அவருக்கு இடது கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சிகிச்சை மேற்கொண்ட அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து விளையாடினார்.
இந்நிலையில் காயமடைந்த ரீஸ் டாப்லியின் விரல் உடைந்திருக்காலம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் எஞ்சிய உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காயமடைந்த டாப்லிக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்வதற்கு ஆர்ச்சர் பெயர் பரிசீலிக்கப்படாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.