< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தகுதிச்சுற்று; ஹாட்ரிக் வெற்றி பெறுமா வெஸ்ட் இண்டீஸ்...ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்...!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

உலகக்கோப்பை தகுதிச்சுற்று; ஹாட்ரிக் வெற்றி பெறுமா வெஸ்ட் இண்டீஸ்...ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்...!

தினத்தந்தி
|
24 Jun 2023 10:17 AM IST

உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - நேபாளம் அணிகள் மோதுகின்றன.

ஹராரே,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் புலவாயோ மற்றும் ஹராரே நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரக அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் சிக்ஸ் மோதலுக்கு பிறகு அதில் இருந்து இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதுடன் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே, நெதர்லாந்து - நேபாளம் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் தலா 2 வெற்றி பெற்றுளன. இதில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்