< Back
கிரிக்கெட்
உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இலங்கை அணி அறிவிப்பு...!

Image Courtesy: ICC Twitter

கிரிக்கெட்

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இலங்கை அணி அறிவிப்பு...!

தினத்தந்தி
|
10 Jun 2023 2:22 PM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியை நடத்தும் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 2 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

இந்தத் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த இலங்கை அணியில் மலிங்காவை போல் பந்துவீசும் மதீஷா பதிரானா அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்த அணிக்கு தசுன் ஷனகா கேப்டனாகவும், குசல் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி விவரம்:-

தசுன் ஷனகா (கேப்டன்), குசல் மெண்டிஸ் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), திமுத் கருணாரத்னே, பதும் நிசாங்கா, சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, மஹீஷ் தீக்ஷனா, மதிஷா பதிரானா, துஷன் ஹேமந்தா.


மேலும் செய்திகள்