< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அபார பந்துவீச்சு...ஜிம்பாப்வேயை 165 ரன்னில் சுருட்டி அசத்தல்...!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அபார பந்துவீச்சு...ஜிம்பாப்வேயை 165 ரன்னில் சுருட்டி அசத்தல்...!

தினத்தந்தி
|
2 July 2023 4:04 PM IST

இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன.

புலவாயே,

உலககோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ள எஞ்சிய இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி இலங்கையில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கும்பி 0 ரன், எர்வின் 14 ரன், மதாவாரே 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து இணைந்த வில்லியம்ஸ், ராசா இணை அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. இதில் வில்லியம்ஸ் அரைசதம் அடித்தார். இதையடுத்து வில்லியம்ஸ் 56 ரன்னிலும், ராசா 31 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் தீக்சனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆட உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கிட்டத்தட்ட உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறும்.

மேலும் செய்திகள்