உலகக்கோப்பை தகுதிச்சுற்று; நெதர்லாந்து - ஓமன் அணிகள் நாளை மோதல்..!
|உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து - ஓமன் அணிகள் மோத உள்ளன.
ஹராரே,
உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து - ஓமன் அணிகள் மோத உள்ளன.
உலககோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ள எஞ்சிய இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பேப்வே அணியை வீழ்த்தி இலங்கை அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறியது.
எஞ்சிய ஒரு அணியின் இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள்உக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து - ஓமன் அணிகள் மோத உள்ளன.ஓமன் அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.
அதேவேளையில் நெதர்லாந்து அணி நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் ஒருவேளை தோல்வி அடைந்தால் நெதர்லாந்து அணி உலககோப்பை தொடருக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.