< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஓமன் அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
கிரிக்கெட்

உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஓமன் அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

தினத்தந்தி
|
4 July 2023 3:34 AM IST

நெதர்லாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

ஹராரே,

உலககோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ள எஞ்சிய இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி ஏற்கெனவே தகுதிபெற்றுள்ள நிலையில், எஞ்சிய ஒரு அணியின் இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - ஓமன் அணிகள் மோதின. ஹராரேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி நெதர்லாந்து அணி முதலில் களமிறங்கியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை பெய்ததால், போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் 110 ரன்கள் எடுத்தார். பரேசி 97 ரன்கள் எடுத்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

இதனை தொடர்ந்து 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. ஓமன் அணியில் ஒருவரை தவிற மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அயான் கான் மட்டும் தன் பங்குக்கு சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். எனினும், மறுமுனையில் அவருடன் இணைந்து எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடவில்லை.

இறுதியில் ஓமன் அணி 48 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றதுடன், அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.

மேலும் செய்திகள்