< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தகுதிச்சுற்று; ஸ்காட்லாந்து அபார பந்து வீச்சு...வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னுக்கு ஆல் அவுட்...!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

உலகக்கோப்பை தகுதிச்சுற்று; ஸ்காட்லாந்து அபார பந்து வீச்சு...வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னுக்கு ஆல் அவுட்...!

தினத்தந்தி
|
1 July 2023 4:29 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 45 ரன்கள் எடுத்தார்.

ஹராரே,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பஒ தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்த சூப்பர் 6 தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சார்லஸ் 0 ர, கிங் 22 ரன், அடுத்து களம் இறங்கிய புரூக்ஸ் 0 ரன், ஹோப் 13 ரன், மேயர்ஸ் 5 ரன், பூரன் 21 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹோல்டர், ஷெப்பர்ட் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.

இதில் ஹோல்டர் 45 ரன்னிலும், ஷெப்பர்ட் 36 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆடி வருகிறது.இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்