உலகக்கோப்பை கிரிக்கெட்; பாக். எதிரான ஆட்டத்தில் கில் விளையாடுவாரா...? - ரோகித் அளித்த பதில்
|உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
அகமதாபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் ஆடுவாரா என்பதே பலரது கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மாவிடம் நாளை நடைபெறும் ஆட்டத்தில் கில் விளையாடுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா கூறியதாவது,
99 சதவீதம் அவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.