உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து
|நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்தார்.
கொல்கத்தா,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 3 ரன்னிலும், ஓ டவுட் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த பாரேசி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் கேப்டன் எட்வர்ட்ஸ் நிலைத்து நின்று விளையாடினாலும், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. அக்கர்மேன் 15 ரன்னிலும், டி லீட் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்தார். அவர் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்காளதேச அணி தரப்பில் சொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரகுமான், மெஹதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.